*இஸ்லாமிய அகீதா சீராக இருந்தால், எல்லாமே சீராக அமையும்!*
➖➖➖🎁🎯🎯🎁➖➖➖
அல்லாமா ஸாலிஹ் பfவ்ஸான் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“எல்லாவற்றுக்கும் முன்னால் முதலாவதாக இஸ்லாமியக் கொள்கையான 'அகீதா' வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி இஸ்லாமிய இளைஞர்களுக்கும், ஏனைய முஸ்லிம்களுக்கும் நான் உபதேசம் செய்கின்றேன். ஏனெனில், செயல்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும், மறுக்கப்படுவதற்கும் அடிப்படையாக அமைந்திருப்பது இந்த அகீதாதான். அகீதா சரியாக இருந்து ரசூல்மார்கள் கொண்டு வந்த விடயங்களுக்கும் உடன்பாடாக அது இருக்க வேண்டும். குறிப்பாக எமது இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கொண்டு வந்ததற்கு உடன்பாடாக இருக்க வேண்டும்; இது இவ்வாறு இருப்பதோடு ஏனைய செயல்கள் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி உளத்தூய்மையோடும், அல்லாஹ்வும் அவனது தூதரும் மார்க்கமாகக் காட்டித் தந்ததற்கு உடன்பாடாகவும் இருக்கின்றபோதுதான் அவை ஏற்றுக்கொள்ளப்படும்.
அகீதா சீர்கெட்டு மோசமாக இருந்தால், அல்லது சமூக வழமைகள் மீதும் மூதாதையர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதன் மீதும் அமைக்கப்பட்டு வழிகெட்டதாக அது இருந்தால், அல்லது இணைவைப்புக் கொள்கையாக அது இருந்தால் செயல்கள் நிராகரிக்கப்படும்; அவற்றிலிருந்து எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது; அதைச் செய்தவர் உளத்தூய்மையுடன் அல்லாஹ்வின் திருமுகத்தை நாடிச் செய்திருப்பினும் சரியே! ஏனெனில், சங்கையான தன் முகத்தை நாடி உளத்தூய்மையுடனும், தனது தூதரின் சுன்னா அடிப்படையில் சரியானதாகவும் செயல்கள் இருந்தால் மாத்திரம்தான் அவற்றை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்.
எனவே, எவர் தனக்கு வெற்றியை விரும்புகிறாரோ, தனது செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்புகின்றாரோ, உண்மையான முஸ்லிமாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றாரோ அவர் அகீதாவில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்; சரியான அகீதாவின் மீது செயல்களை அமைத்துக்கொள்வதற்கு அதைச் சரியாக அறிவதும், அதற்கு முரணாக இருப்பவற்றையும், அதை முறிப்பவற்றையும், அதற்குக் குறைவை ஏற்படுத்துபவற்றையும் அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்!”.
{ நூல்: 'அல்முன்தகா', பக்கம் - 23 }
قال العلاّمة صالح فوزان الفوزان حفظه الله تعالى:-
« أنصح للشباب ولغيرهم من المسلمين: أن يهتمّوا بالعقيدة أولا وقبل كلّ شيئ؛ لأن العقيدة هي الأصل الذي تبنى عليه جميع الأعمال قبولا وردّا. فإذا كانت العقيدة صحيحة موافقة لما جاء به الرّسل عليهم الصلاة والسلام، خصوصا خاتم الرّسل نبيّنا محمدا صلّى الله عليه وسلم؛ فإن سائر الأعمال تقبل إذا كانت هذه الأعمال خالصة لوجه الله تعالى، وموافقة لما شرع الله ورسوله.
واذا كانت العقيدة فاسدة، أو كانت ضالّة مبنيّة على العوائد وتقليد الآباء والأجداد، أو كانت عقيدة شركية؛ فإن الأعمال مردودة لا يقبل منها شيئ ولو كان صاحبها مخلصا وقاصدا بها وجه الله؛ لأن الله سبحانه وتعالى لا يقبل من الأعمال إلا ما كانت خالصة لوجهه الكريم، وصوابا على سنّة رسوله صلّى الله عليه وسلم.
فمن كان يريد النجاة لنفسه، ويريد قبول أعماله، ويريد أن يكون مسلما حقّا فعليه أن يعتني بالعقيدة؛ بأن يعرف العقيدة الصحيحة وما يضادّها وما يناقضها وما ينقصها، حتى يبني أعماله عليها ».
{ المصدر: المنتقى للشيخ صالح الفوزان، صفحة - ٢٣ }
🎁➖➖➖➖➖➖➖➖🎁
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
*19/12/2018*
🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁
0 Comments