*நன்மையை ஏவினால் மட்டும் போதாது; தீமையைத் தடுக்கவும் வேண்டும்!*
➖➖➖📚🌹🌹📚➖➖➖
          அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
          “ஒவ்வொரு முஸ்லிமும் தன் சகோதர முஸ்லிம்களுக்கு கண்ணியம், நற்பாக்கியம், அமைதி ஆகியவற்றை விரும்புபவராக இருக்கின்றார் என்றால் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது அவருக்கு அவசியமானதாகும். ஏனெனில், இப்பணியை  மேற்கொள்வதுதான் முன்னால் சொல்லப்பட்டவைகளைப் பெற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருக்கின்றது. நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் பணியை விட்டுவிடுவதன் இறுதி முடிவு இழிவானதாகவும் மோசமானதாகவுமே இருக்கும். நன்மையை ஏவி தீமையைத் தடுப்போர் மெளனமாக இருக்கின்றார்கள்; பாவங்கள் செய்வோரை அவர்கள் வழியிலேயே செல்ல  விட்டுவிடுகின்றார்கள்; இதனால் அவர்கள் கர்வமாக நடக்கின்றார்கள்;  பெருங்கூட்டத்தினர்  முன்னிலையில் தமது பாவச்செயல்களை பகிரங்கமாக அவர்கள் செய்கின்றார்கள்;  வாழ்க்கைக் கப்பலில் தமது பங்கில் இருப்பதை தாம் விரும்பியபடி செயல்படுத்துவதற்கு அவர்கள் சுதந்திரம் பெற்றவர்கள் என்று  வாதிட்டு அவர்களின் தீய போக்கை இவர்கள் தடுக்காதும் இருப்பார்களாக இருந்தால் நல்லவன், கெட்டவன் என்ற வேறுபாடு இன்றி எல்லோருக்கும் சேர்த்து பொதுப்படையாகவே தண்டனை வரும். இதற்கு, நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் மிகத்தெளிவான உதாரணம் ஒன்றை நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) கூறியுள்ளார்கள்: 
     *“அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை - ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில் (தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது.கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது (அதைக் கொண்டு வர) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால், மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது). அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் (தமக்குள்) 'நாம் (தண்ணீருக்காக) நம்முடைய பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்' என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள். (ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்”*
         இதை, நுஃமான் இப்னு பஷீர்(ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
( நூல்: புகாரி :
2493 )
[ நூல்: 'அல்முஹ்தார் லில்ஹதீசி fபீ ஷஹ்ரி ரமழான்', பக்கம்: 208 }

         قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
         { وكل مسلم يحبّ لإخوانه المسلمين العزّ والسعادة والطمأنينة فعليه أن يأمر بالمعروف وينهى عن المنكر، لأن القيام به سبب لذلك. وعاقبة ترك الأمر بالمعروف والنهي عن المنكر وخيمة، فإذا سكت الآمرون بالمعروف الناهون عن المنكر، وتركوا أهل المعاصي يسرحون ويمرحون ويعلنون معاصيهم على مشهد من الملأ بحجة أنهم يتصرفون في نصيبهم من سفينة الحياة وهم أحرار فإن العقوبة تعمّ الصالح والطالح، وقد ضرب النّبيّ صلّى الله عليه وسلم مثلا بليغا، فعن النّعمان بن بشير رضي الله عنهما عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَال: َ *« مَثَلُ الْقَائِمِ عَلَى حُدُودِ اللَّهِ وَالْوَاقِعِ فِيهَا كَمَثَلِ قَوْمٍ اسْتَهَمُوا عَلَى سَفِينَةٍ فَأَصَابَ بَعْضُهُمْ أَعْلَاهَا وَبَعْضُهُمْ أَسْفَلَهَا فَكَانَ الَّذِينَ فِي أَسْفَلِهَا إِذَا اسْتَقَوْا مِنْ الْمَاءِ مَرُّوا عَلَى مَنْ فَوْقَهُمْ فَقَالُوا لَوْ أَنَّا خَرَقْنَا فِي نَصِيبِنَا خَرْقًا وَلَمْ نُؤْذِ مَنْ فَوْقَنَا فَإِنْ يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا وَإِنْ أَخَذُوا عَلَى أَيْدِيهِمْ نَجَوْا وَنَجَوْا جَمِيعًا »*
( رواه البخاري في صحيحه - كتاب الشركة - باب هل يقرع في القسمة والاستفهام فيه، رقم الحديث : ٢٤٩٣ )
[ المصدر: المختار للحديث في شهر رمضان، ص - ٢٠٨ ]
📚➖➖➖➖➖➖➖➖📚
               *✍தமிழில்✍*
                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
                      *20/12/2018*
💢💢💢💢🎁🎁💢💢💢💢