*நீங்கள் விலகிக்கொள்வீர்களா?*
➖➖➖🌀📚📚🌀➖➖➖
🎯 மதுபானம் குறித்து அல்லாஹ் கூறும்போது, “ஷைத்தான் விரும்புவதெல்லாம் மது, சூதாட்டம் என்பவற்றின் மூலம் உங்களுக்கிடையில் பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்தவும், உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், மற்றும் தொழுகையை விட்டும் தடுத்து விடவுமேயாகும். *எனவே, நீங்கள் விலகிக்கொள்வீர்களா?”* (அல்குர்ஆன், 05:91 ) என்று கூறுகிறான்.
          கலாநிதி அஷ்ஷெய்க் அப்துல் மஜீத் அல்ஜும்ஆ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
          *“நீங்கள் விலகிக்கொள்வீர்களா?”* என்று அல்லாஹ் கேட்டவுடன், *“நாம் விலகிக்கொண்டோம்! நாம் விலகிக்கொண்டோம்!”* என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இவ்வாறே, நல்ல ஈமானிய அடிப்படையில் சமூகம் வளர்ந்தால் அனைத்துமே அதற்கு இலகுவாகி விடும்; அல்லாஹ் அதற்கு மார்க்கமாக்கியது தாக்கத்தை ஏற்படுத்தும்! அத்தோடு,  இந்த மார்க்கம் இலகுவானது; மனித நலன்களை உறுதிப்படுத்தி அவற்றை அதிகப்படுத்திக் கொள்ளவும், பாதிப்புளைத் தடுத்து அவற்றை குறைத்து விடவுமே அது வந்திருக்கிறது என்றும் அறிந்து கொள்ளும். மனிதர்களை அச்சுறுத்தி, நாடுகளைச் சீர்குலைக்கும்  ஆபத்தான விடயமான இந்த போதைப்பொருள் பாவனையை  இஸ்லாமிய ஷரீஆ தடை செய்திருப்பது, மனித நலன்களை உறுதிப்படுத்தும் அதன் போக்கில் முக்கிய ஒன்றாகும்”.
(“போதைப்பொருட்களின் அபாயம்” எனும் தலைப்பில், ஹி: 1440, ரபீஉல் ஆகிர் மாதம், பிறை 08- ல் நிகழ்த்தப்பட்ட விரிவுரை ஒன்றிலிருந்து... )


🎯 قال الله تعالى عن الخمر: {إنما يريد الشيطان أن يّوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدّكم عن ذكر الله وعن الصلاة *فهل أنتم منتهون }* « سورة المائدة، الآية: ٩١ ».
            قال الشيخ الدكتور عبد المجيد جمعة حفظه الله تعالى:
        « الصحابة قالوا: "انتهينا انتهينا" .هكذا المجتمع إذا تربى في بحبوحة الإيمان يهون عليه كلّ شيئ، ويؤثر ما شرعه الله عزّ وجلّ علما منه أن هذه الشريعة سمحاء جاءت لتحقيق مصالح العباد وتكثيرها، ودرء المفاسد وتقليلها. ومن مصالح العباد أن حرمت هذه الآفة التي تهدّد العباد وتفسد البلاد »
( محاضرة: خطر المخدرات، 08 ربيع الآخر 1440هجري )
[ قناة: فوائد الشيخ عبدالمجيد جمعة حفظه الله ]
📚➖➖➖➖➖➖➖➖📚
               *✍தமிழில்✍*
                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
                      *21/12/2018*
🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯