*எப்போதோ மரணித்த மார்க்க மேதைகள், இப்போதும் நன்மக்கள் மனங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்!*
➖➖➖🌀🎁🎁🌀➖➖➖




         இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
          *«(நபிமொழி) ஹதீஸ் துறை, (fபிக்ஹ்) இஸ்லாமிய சட்டத்துறை போன்றவற்றில் மேதைகளாக இருந்தவர்கள்  போன்ற இஸ்லாமிய அறிஞர்களின் நிலைமைகளை  ஆழமாக சிந்தித்துப் பார்க்கும் ஒருவர்,  “மண்ணுக்குக் கீழ் அவர்கள் அடங்கப்பட்டிருந்தாலும் (மண்ணுக்கு மேல் வாழ்ந்து வரும்) மக்கள் மத்தியில்  உயிர் வாழ்வோர் போன்று எப்படி  அவர்கள் ( இப்போதும்) இருந்து கொண்டிருக்கிறார்கள்!?” என்ற ஆச்சரியத்தை அவர் அறிந்து கொள்வார். அவர்களின் உருவங்களைத் தவிர வேறெதுவுமே அவர்களிலிருந்து காணாமல் போகவில்லை; அவர்களின் ஞாபகமும், அவர்களின் செய்தியும்,  பேச்சும், அவர்கள் மீதான புகழும் துண்டிக்கப்படாமல்தான் இருக்கின்றன. இதுதான் உண்மையான வாழ்க்கையாகும்!»*.
( நூல்: 'மிfப்தாஹு தாரிஸ் ஸஆதா', பக்கம் - 139 )

            قال العلّامة إبن القيم رحمه الله تعالى:-
             *{ من تأمل أحوال أئمة الإسلام كأئمة الحديث والفقه كيف هم تحت التراب وهم في العالمين كأنهم أحياء بينهم؛ لم يفقدوا منهم إلا صورهم. وإلا فذكرهم وحديثهم والثناء عليهم غير منقطع. وهذه هي الحياة حقا }*.
[ المصدر: 'مفتاح دار السعادة' لابن القيم ، ص - ١٣٩ ]
🌠➖➖➖➖➖➖➖➖🌠
               *✍தமிழில்✍*
                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா
                      *14/02/2019*
💠🔅💠🔅💠🔅💠🔅🔅💠