_வார்த்தைகளால் பாதிக்கப்படுவதை பாதுகாப்போம்_.





*சிந்திக்காமல் பேசும் வார்த்தையால் சிதருண்டு போகும் உள்ளங்கள்*.

*நெஞ்சுருகி கையேந்தினால் தடை இன்றி ஏற்கப்படும்*.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

*‘‘அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள்*. ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை’’ என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.

நூல்: புகாரி 2448


وَلَا تُجَادِلْ عَنِ الَّذِيْنَ يَخْتَانُوْنَ
 اَنْفُسَهُمْ‌  اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ خَوَّانًا اَثِيْمًا ۙ‌


(நபியே!) *பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்;* ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.

(அல்குர்ஆன் : 4:107)

_*يَّسْتَخْفُوْنَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُوْنَ مِنَ اللّٰهِ وَهُوَ مَعَهُمْ اِذْ يُبَيِّتُوْنَ مَا لَا يَرْضٰى مِنَ الْقَوْلِ‌ وَكَانَ اللّٰهُ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطًا‏*_

இவர்கள் (தங்கள் சதிகளை) மனிதர்களிடமிருந்து மறைத்து விடுகின்றனர்; ஆனால் (அவற்றை) அல்லாஹ்விடமிருந்து மறைக்க முடியாது; ஏனெனில் *அவன் பொருந்திக் கொள்ளாத சொற்களில் அவர்கள் இரவில் சதி ஆலோசனை செய்யும் போது அவன் அவர்களுடன் இருக்கின்றான்*. மேலும் அவர்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 4:108)

_*لَا يُحِبُّ اللّٰهُ الْجَــهْرَ بِالسُّوْٓءِ مِنَ الْقَوْلِ اِلَّا مَنْ ظُلِمَ‌ وَكَانَ اللّٰهُ سَمِيْعًا عَلِيْمًا‏*_

அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) *வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை*  அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 4:148)

_*وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَىِّ الْقَيُّوْمِ‌ وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا‏*_

இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் *அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்*.

(அல்குர்ஆன் : 20:111)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

*‘‘அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை’’* என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.

நூல்: புகாரி 2448

உண்மையில் சிந்திக்காமல் பேசுகின்ற சில வார்த்தைகளால் பலரின் உள்ளங்கள் காயப்படுகின்றது.

உள்ளம் பாதிக்கப்பட்ட வர்கள் இறைவனிடம் கையேந்தி  மன வேதனையால் சாபம் இட காரணமாகி விடுகிறார்கள்.

எனவே மேற் கூறப்பட்டுள்ள இறை வசங்களையும்,இறைத் தூதரின் எச்சரிக்கைகளையும்,
உள்ளத்தில் பதிவேற்றம் செய்து
*மற்றவர்களின் மனம் நோகும் படி வார்த்தைகளால் காயப்படுத்தி அநீதம் இழைப்பதை தவிர்த்து*
அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பாதுகாப்புப் பெற்று

நமது வார்த்தைகளால்,எழுத்துக்களால்,
முகநூல் வட்சப் பதிவுகளால்,துண்டு பிரசுரங்களால்   காயப்பட்டவர்களை கண்ணியப் படுத்தி, அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அல்லாஹ்வின் உதவியைப் பெற்று
நல்லதைப் பேசி நற்பேறு அடைந்து,
சுவனத்தைப் பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

✍ ஷாபி ஸஃதி

23/01/2020