இன்று இரவும்
இந்த அழிகய அமைதியான இராப்பொழுதினில்
என் இறைவனுடன் மட்டும் உறையாடிட அவகாசமளித்த உன் அன்புக்கு ஆயிரம் கோடி நன்றிகள்...
வீட்டுக்குள் முடங்கிப்போனது கால்களே அன்றி...
மனித உள்ளங்களல்ல....
தவ்பாவின் வாயிலைத்திறந்து வாரியணைத்துக் கொள்ள அவன் கைகள் நீளுகின்றன...
அதனை அள்ளிப்பொருக்கிட நம் இதயங்களின் ஓட்டைகள் இடமளிக்க மறுக்கின்றன...
இறையோனுக்காய் உன் விழிகள் தூக்கமதை தூர எறிந்து விழிக்கின்ற கனமே...
அவன் கருணைப்போர்வையில் நீயும் சிக்குண்டு கொள்வாய்...
இவ்வழகிய தருணம் தொடர்ந்தும் நீடிக்க ....
அவா கொள்கிறேன்...
அவனுக்கென இரா நீடிக்க வரம் தந்த உன் அன்பிற்கு
ஆயிரம் கோடி நன்றிகள்....
0 Comments